Home இலங்கைவிமுக்தி குமாரதுங்க அரசியலில் ஈடுபடவுள்ளார்?

விமுக்தி குமாரதுங்க அரசியலில் ஈடுபடவுள்ளார்?

by admin

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்க அரசியலில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்ற பெயரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு பரிச்சயமான நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா, இன்று இதுகுறித்து ஊகம் வெளியிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை தன்னால் கணிக்க முடியாது எனவும் ஆனால் விமுக்தியை அரசியலுக்கு வருவதற்கான எந்தவொரு கலந்துரையாடலும் தற்போது நடைபெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது மகன் அரசியலுக்கு வருவதை முன்னர் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More