Home இலங்கைநொச்சிக்குளம் இரட்டைக்கொலை – 20 சந்தேக நபர்களுக்கும் தொடர்ந்து விளக்கமறியல்

நொச்சிக்குளம் இரட்டைக்கொலை – 20 சந்தேக நபர்களுக்கும் தொடர்ந்து விளக்கமறியல்

by admin



மன்னார் நொச்சிக்குளம் இரட்டை படுகொலை தொடர்பாக சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட 20 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை (30-09-2022) விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று வெள்ளிக்கிழமை (16) உத்தரவிட்டார்.

குறித்த 20 சந்தேக நபர்களும் இன்றைய தினம் மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் சம்பவ இடத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட சான்று பொருட்களான இரத்த மாதிரி, இரண்டு கோடாரிகளை பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்ப காவல்துறையினரினால் மன்றில் அனுமதி கோரிய போது மன்றினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. காவல்துறை அதிகாரி ஒருவரை நியமித்து,குறித்த சான்று பொருட்களையும் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்ப நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

  கடந்த  ஜூன் மாதம் 10 ஆம் திகதி மன்னார் நொச்சிக்குளத்தில் இடம்பெற்ற   சம்பவத்தில், உயிலங்குளம் பகுதியை சேர்ந்த  சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More