பேராதனை பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டில் கல்வி கற்கும், மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் பேராதனைக் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த யக்கல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவன் கடந்த 16ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
மாணவனின் கையடக்கத் தொலைபேசிக்கு அவரது நண்பர்கள் அழைப்பை ஏற்படுத்திய போது பதில் கிடைக்காததால், விடுதி உரிமையாளரிடம் விசாரித்துள்ள போது மாணவனின் அறை மூடியிருப்பதாகவே தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பின்னர் நேற்று (18) மாலை மாணவன் தங்கியிருந்த அறையை சோதனையிட்ட போது, தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மாணவனால் எழுதப்பட்ட கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.