அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜுலி சங், பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன், கனடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மைக்கினன் ஆகியோரை வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் எனும் தலைப்பில் புதிய தீர்மானத்திற்கான வரைவு இறுதிக் கட்டத்தினை எட்டியிருக்கும் நிலையிலேயே இந்தச் சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாமைக்கான காரணங்களை அவர் தெளிவு படுத்தியதாக தெரிவித்துள்ளார்.