Home இலங்கை13 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றத்தில் 73 வயது முதியவர் கைது

13 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றத்தில் 73 வயது முதியவர் கைது

by admin

13 வயதுச் சிறுமியை துஸ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவர் கோப்பாய் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் காவல்துறைப்பிரிவில் இருபாலையைச் சேர்ந்த 73 வயது முதியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

13 வயதுச் சிறுமி ஒருவர் வயோதிபரினால் துஸ்பிரயோகத்துக்குள்ளாகி கர்ப்பமாகி உள்ளார் என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கோப்பாய் காவல்துறையினருக்கும் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் காவல்துறையினர் வயோதிபரை கைது செய்தனர். அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்ற காவல்துறையினர் மருத்துவ பரிசோதனைக்கு முற்படுத்தியுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் வயோதிபர் நாளை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More