Home இலங்கைபிரபல போதைப்பொருள் வியாபாரி உள்ளிட்ட இருவர் கைது

பிரபல போதைப்பொருள் வியாபாரி உள்ளிட்ட இருவர் கைது

by admin

யாழ்ப்பாணம் , கோப்பாய் காவல்துறையினரினால் பிரபல போதைப்பொருள் விற்பனையாளர் என அடையாளம் காணப்பட்ட நபர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ்.மாவட்டத்தில் பரவலாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர் என காவல்துறையினரினால் அடையாளம் காணப்பட்ட உரும்பிராய் செல்வபுரம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய நபரை நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் செல்வபுரம் பகுதியில் வைத்து 5 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபர் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர் எனவும், தம்மால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த நிலையில் தலைமறைவாகி இருந்தார் எனவும் , கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள நபரை காவல்நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனர். 

இதேவேளை கோப்பாய் காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட கல்வியங்காட்டு பகுதியில் , 1கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவா் காவல்துறையினரினால் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட நபர் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் எனவும் , கைது செய்யப்பட்ட நபரை காவல்நிலையத்தில் தடுத்து வைத்து தாம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்தனர். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More