Home இலங்கை “எனது மகன் எனக்கு வேண்டாம்” என கடிதம் எழுதி சுன்னாகம் காவல்துறையினரிடம் ஒப்படைத்த தாய்!

“எனது மகன் எனக்கு வேண்டாம்” என கடிதம் எழுதி சுன்னாகம் காவல்துறையினரிடம் ஒப்படைத்த தாய்!

by admin

“எனது மகன் எனக்கு வேண்டாம்” என தாயாரால் கடிதம் எழுதி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட மகன் நீதிமன்ற உத்தரவில் அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் சுன்னாகம் காவல்துறைப்பிரிவுக்கு உட்பட பகுதியில் வசிக்கும் தாயொருவர் தனது 15 வயது மகன் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளமையால், மகனை தன்னால் பராமரிக்க முடியவில்லை என கூறி ” எனது மகன் எனக்கு வேண்டாம்” என தனது கைப்பட கடிதம் எழுதி காவல்துறையினரிடம் வழங்கி , தனது மகனையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். 

அதனை அடுத்து காவல்துறையினரினால் குறித்த சிறுவன் சிறுவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து , சிறுவனை அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்குமாறு மன்று உத்தரவிட்டதற்கு அமைய சிறுவன் நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More