யாழ்ப்பாணக் கோட்டை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் இடம்பெறும் கலாச்சார சீரழிவுகளை தடுக்கும் நோக்குடன் அப்பகுதியினை தூய்மைப்படுத்தும் செயற்றிட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.
தொல் பொருள் திணைக்களம், யாழ்.மாநகர சபை மற்றும் யாழ்.பிரதேச செயலகம் ஆகியவை இணைந்து முன்னெடுக்கும் இந்த செயற்றிட்டம் யாழ்.கோட்டை பகுதியில் நடைபெற்றது.
கோட்டை பகுதியை சூழவுள்ள பற்றைக்காடுகளை துப்பரவு செய்வதன் ஊடாக கோட்டைப் பகுதியில் இடம்பெறும் சமூகப் பிறழ்வான நடவக்கைகளைக் கட்டுப்படுத்த முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த செயற்றிட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்தினர், யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள், யாழ்.பிரதேச செயலகப் பணியாளர்கள், சமூக மட்ட அமைப்புக்கள்,தன்னார்வ தொண்டு அமைப்புக்கள், இளையோர் அமைப்புக்கள் என பலரும் இணைந்திருந்தனர்.