Home இலங்கைஅபிவிருத்திப் பணிகளுக்கு இடையூறு செய்வோருக்கு எதிராக வீதியில் இறங்கத் தயார் – பிரதமர்

அபிவிருத்திப் பணிகளுக்கு இடையூறு செய்வோருக்கு எதிராக வீதியில் இறங்கத் தயார் – பிரதமர்

by admin


அபிவிருத்திப் பணிகளுக்கு இடையூறு செய்வோருக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தத் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கேகாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுக்கொடுக்கும் போது அதனை சீர்குலைக்க முயற்சிப்போருக்கு எதிராக வீதியில் இறங்கி பதில் வழங்க தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் மாதம் ஹம்பாந்தோட்டை அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்படும் என  அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் 2020ஆம் ஆண்டு வரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இணைந்து செயற்படும் எனவும், அதற்கு எதிராக செயற்படுபவர்களுக்கு ஐக்கிய தேசிய உரிய பதிலை வழங்கும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More