Home இலங்கையாழில் போதைப்பொருளுடன் மூவர் கைது – ஒருவர் தப்பியோட்டோம்

யாழில் போதைப்பொருளுடன் மூவர் கைது – ஒருவர் தப்பியோட்டோம்

by admin

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றுமொரு நபர் காவல்துறையினரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பி சென்றுள்ளார். 

சிறுப்பிட்டி கலையொளி பகுதியில் 99 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 1500 மில்லி கிராம் கஞ்சா ஆகிய போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட இருவரையும் அச்சுவேலி காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

அதேவேளை யாழ்.நகரில் இருந்து தீவக பகுதிக்கு போதைப்பொருட்களை கடத்துபவர்கள் குறித்து ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் , மண்கும்பான் பகுதியில் 20 வயதான இளைஞனை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 36 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டனர். 

குறித்த நபருடன் வருகை தந்திருந்த மற்றுமொரு இளைஞன் காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பி ஓடியுள்ளார். 

தப்பியோடிய நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்து உள்ளதுடன் , கைது செய்யப்பட்டுள்ள நபரே யாழ்.நகர் பகுதியில் இருந்து தீவக பகுதிகளுக்கு போதைப்பொருளை கடத்தி வந்து விற்பனை செய்பவர் என காவல்துறையினர் தெரிவித்தனர். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More