கென்யாவில் பாகிஸ்தான் பத்திரிகையாளரான அர்ஷாத் ஷெரீப் (வயது 49) என்பவா் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளாா். . இவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை தீவிரமாக ஆதரித்ததுடன் இராணுவத்தை கடுமையாக விமர்சித்தும் வந்தார்.
இவர் இங்கிலாந்து மற்றும் துபாய்க்கு சென்றுவிட்டு கிழக்கு ஆபிரிக்க நாடான கென்யாவுக்கு சென்றிருந்தநிலையில் தலைநகர் நைரோபி அருகில் உள்ள கஜியாடோ என்ற இடத்தில் ஒரு வீதித்தடுப்பில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துக்காக வருத்தப்படுவதாக காவல்துறை தரப்பில் அங்கு ஒரு அறிக்கை வெளியானது . திருட்டுப்போன ஒரு காரைப் பிடிப்பதற்காக காவல்துறையினா் வீதித்த்தடுப்பு போட்டிருந்ததாகவும் அர்ஷாத் ஷெரீப் வாகனம் தடுப்பை மீறி சென்றபோது சுட்டுவிட்டதாகவும் காவல்துறை தரப்பில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துக்கு எதிா்ப்புத் தொிவித்து கராச்சியில் பத்திரிகையாளர்கள் ஒன்றுசோ்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
.