நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டு கலைக்கூடல் அமைப்பினரால் தமிழ் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை இளைஞர்கள் மத்தியில் பரப்பும் வேலை திட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக நல்லூர் சைவ தமிழ் பண்பாட்டு கலைக்கூடலின் இணைத்தலைவர் முனைவர் திருநாவுக்கரசு கமலநாதன் தெரிவித்தார்
நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டு கலைக்கூடல் கடந்த ஒரு வருடங்களாக பல பண்பாட்டு விழுமிய செயற்பாடுகளை செய்து கொண்டு வருகின்றது நூல்களை வெளியிட்டு வருகின்றது கலை நிகழ்ச்சிகளை நடாத்தி இருக்கின்றது நடாத்தியும் வருகிறது.
இப்பொழுது எங்களுடைய பண்பாட்டு விழுமிய செயற்பாடுகளை மெல்ல மெல்ல எம்மிடமிருந்து அருகி செல்கின்ற நிலையிலே ஒரு எழுச்சியினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு அதற்கான முயற்சியில் நாம் ஈடுபட்டு இருக்கின்றோம்
இன்று அதற்கான அங்கு ஒரு அங்குரார்ப்பணம் இடம்பெற்றுள்ளது தொடர் நிகழ்ச்சிகள் ஒவ்வொரு மாதத்திலும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை காலையிலே இடம் பெறும்
ஒரு நற் சிந்தனை, பண்ணிசை, கோலம் போடுதல், காவடியாட்டம் எனும் இவை போன்ற எங்களுடைய பாரம்பரிய செயற்பாடுகளை நாம் இளைஞர்கள் மத்தியிலும் மற்றும் நாட்டமுள்ளவர்கள் மத்தியிலும் பரப்புவதற்காக இந்த முயற்சியினை பணிப்பாளர்கள் ஈடுபட்டிருக்கின்றார்கள்
இதிலே பங்கு பற்ற விருப்பமானவர்கள் எங்களுடன் தொடர்பு கொண்டு இதிலே கலந்து கொள்ளலாம்
ஒரு மாதத்திலே மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை ஒரு மணித்தியாலம் நல்லூர் வீதியில் உள்ள மகேஸ்வரன் மணிமண்டபத்தில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது இந்த நிகழ்ச்சி உண்மையிலே மிகவும் சிறப்பானதாக அமையஇறைவன் அருள் புரிவார்,என்றார்,