Home இலங்கைகெப்பித்திகொல்லாவவில் பிக்கு உட்பட்ட குழுவினர் தாக்கி, காவற்துறை அதிகாரி பலி! நால்வர் கைது!

கெப்பித்திகொல்லாவவில் பிக்கு உட்பட்ட குழுவினர் தாக்கி, காவற்துறை அதிகாரி பலி! நால்வர் கைது!

by admin

அநுராதபுரம், கெப்பித்திகொல்லாவ பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்படுத்த காவற்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (31.10.22) இரவு கெப்பித்திகொல்லாவ, ரம்பகெபூவெவ பிரதேசத்தில், காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், கெப்பித்திகொல்லேவ காவற்துறையினர் அந்த இடத்திற்குச் சென்று கொண்டிருந்த போது பதற்றமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

அவ்வேளையில், அப்பகுதியைச் சேர்ந்த பிக்கு உட்பட சுமார் நூறு பேர் கொண்ட கூட்டத்தை கட்டுப்படுத்த காவற்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் தாக்கியதில் காவற்துறை சார்ஜன்ட் ஒருவர் பலத்த காயமடைந்து கெப்பித்திகொல்லேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கெப்பித்திகொல்லேவ காவற்துறை பிரிவில் கடமையாற்றும் காவற்துறை சார்ஜன்ட் எனவும், அவர் வாரியபொல பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பிக்கு உட்பட 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More