Home இலங்கைஆலயத்திற்கு சென்றவர் வழுக்கி விழுந்து உயிரிழப்பு

ஆலயத்திற்கு சென்றவர் வழுக்கி விழுந்து உயிரிழப்பு

by admin

ஆலயத்திற்கு சென்றவர் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார். மட்டுவில் தெற்கை சேர்ந்த சண்முகலிங்கம் கேசவநாதன் (வயது 52) என்பவரே உயிரிழந்துள்ளார். 

குறித்த நபர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்ற போது , ஆலயத்தினுள் செல்வதற்காக கால் கழுவும் இடத்தில் கால் கழுவும் போது , கால் வழுக்கி விழுந்துள்ளார். 

அதன் போது பின் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக சாவகச்சேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More