Home இலங்கைமண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

by admin

பண்டாரவளை காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட காஹகல்ல அம்பரவ பகுதியில் பெய்த கடும் மழையினால் மண்மேட்டுடன் கூடிய கொங்கிரீட் கட்டடம் வீடொன்றின் மீது சரிந்து விழுந்ததில் ஆண் ஒருவர், உயிரிழந்துள்ளார்

நேற்று (31) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் டபிள்யூ.எம். ஜெயசேகர (73 வயது) என்பவரே உயிரிழந்துள்ளாா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயங்களுக்குள்ளான அவரது மனைவி தியத்தலாவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்தவரின் சடலம் தியத்தலாவ பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More