Home இலங்கை“உயிராயுதம் குறுங்காவியம்” நூல் வெளியீடு

“உயிராயுதம் குறுங்காவியம்” நூல் வெளியீடு

by admin

கவிஞர் மு.சிங்கராயர் எழுதிய “உயிராயுதம் குறுங்காவியம்” எனும் நூல் வெளியீடு  யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத் தூதுக் கலையகத்தில்  இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை கிளிநொச்சி அன்னை இல்ல இயக்குனர் அருட்திரு செ.அன்புராசா தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரி அதிபர் அருட்திரு.ஏ.பி.திருமகன் கலந்து கொண்டனர்.

பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் ஓய்வுநிலை அதிபரும், மூத்த கவிஞருமான சோ.பத்மநாதன் நூலின் மதிப்பீட்டுரையை நிகழ்த்தினர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா நூலை வெளியிட்டு வைத்ததுடன்
கவிஞர் மு.சிங்கராயரையும் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More