இலங்கைத் தமிழ் அகதிகள் 303 பேருடன் கனடா நோக்கி பயணித்த மீன்பிடிப் படகு மூழ்கியதையடுத்து, அதில் பயணித்தவா்கள், சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டு இன்று (08) வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கப்பலில் இருந்த 264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 சிறுவர்கள் உட்பட 303 போ் இருந்ததாகவும் சீரான உடல்நிலையில் இருக்கும் அவா்கள் தற்போது வியட்நாமின் ஹீலியோஸ் லீடருக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது
படகில் இருந்த இலங்கை பிரஜை ஒருவர், தாம் பிரச்சினையில் சிக்கியியுள்ளதாக கடற்படையை தொடர்பு கொண்டு அறிவித்தனையடுத்து கொழும்பிலுள்ள கடல் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையமானது சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸிடமிருந்து உதவியைக் கோரியிருந்தது.
இதனை அடுத்து, படகிலிருந்தவர்களை மீட்டு வியட்நாம் நோக்கி கொண்டு செல்வதாக சிங்கப்பூர் அதிகாரிகள், இலங்கைக்கு அறிவித்துள்ளதாக டற்படை தெரிவித்துள்ள.
படகிலிருந்த இலங்கையரொருவரின் பிரசன்னத்தை மாத்திரமே உத்தியோகபூர்வமாக கடற்படை அறிந்துள்ளதாகத் தெரிவித்த கடற்படைப் பேச்சாளர், ஏனையோரின் அடையாளங்கள், அவர்கள் வியட்நாமில் தரையிறங்கிய பின்னர் உறுதிப்படுத்தப்படும் எனத் தொிவித்திருந்த நிலையில் வியட்நாமை இன்று (08) சென்றடைந்த கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்கள், கனடா நோக்கி பயணமான இலங்கைத் தமிழர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.