Home இலங்கைஅச்சுவேலி வைத்தியசாலை பற்சிகிச்சை நிலையம் மேம்படுத்தப்பட்டு திறப்பு!

அச்சுவேலி வைத்தியசாலை பற்சிகிச்சை நிலையம் மேம்படுத்தப்பட்டு திறப்பு!

by admin

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் பற்சிகிச்சை நிலையம் மேம்படுத்தப்பட்டு, யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனால்,
இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் இயங்கி வரும் பற்சிகிச்சை நிலையம் நீண்ட காலமாக வசதிகள் அற்ற நிலையில் இயங்கி வந்தது.

அந்நிலையில் மக்கள் நல்வாழ்வு மையத்தின் 16 இலட்சம் ரூபா நிதி உதவியில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டதனை தொடர்ந்து இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரனும், சிறப்பு விருந்தினராக யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் பி.சத்தியகுமார் , அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்திய நிபுணர் பி.குணதீபன் மற்றும் திரு.மதுரமணி இராசையா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More