167
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் உள்ள 12 வயதுச் சிறுவனை பாலியல் ரீதியில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சிறுவனிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
இல்லத்தில் காப்பாளராகப் பணியாற்றும் 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மன்னாரைச் சேர்ந்தவர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டுள்ள நபரிடம்காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love