Home இலங்கைதமிழ் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை இளைஞர்கள் மத்தியில் பரப்பும் வேலை திட்டம்!

தமிழ் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை இளைஞர்கள் மத்தியில் பரப்பும் வேலை திட்டம்!

by admin

நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டு கலைக்கூடல் அமைப்பினரால் தமிழ் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை இளைஞர்கள் மத்தியில் பரப்பும் வேலை திட்டம் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் நல்லூர் வீதியில் உள்ள மகேஸ்வரன் மணிமண்டபத்தில் முதலாவது செயற்திட்டம் ஆரம்பமாகியது

நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டு கலைக்கூடல் கடந்த ஒரு வருடங்களாக பல பண்பாட்டு விழுமியம்செயற்பாடுகளை செய்து கொண்டு வருகின்றது நூல்களை வெளியிட்டு வருகின்றது கலை நிகழ்ச்சிகளை நடாத்தி இருக்கின்றது நடாத்தியும் வருகிறநிலையில்

தமிழ் பண்பாட்டு விழுமிய செயற்பாடுகளை மெல்ல மெல்ல எம்மிடமிருந்து அருகி செல்கின்ற நிலையிலே ஒரு எழுச்சியினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது

ஒவ்வொரு மாதத்திலும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை காலையிலே இடம் பெறவுள்ளது

ஒரு நற் சிந்தனை பண்ணிசை கோலம் போடுதல் காவடியாட்டம் எனும் இவை போன்ற எங்களுடைய பாரம்பரிய செயற்பாடுகளை நாம் இளைஞர்கள் மத்தியிலும் மற்றும் நாட்டமுள்ளவர்கள் மத்தியிலும் பரப்புவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையானஇன்று நல்லூர் வீதியில் உள்ள மகேஸ்வரன் மணிமண்டபத்தில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது இந்த நிகழ்ச்சியில் மாலை கட்டுதல் வகுப்புகள் இடம் பெற்றிருந்ததோடுஇந்துசாதனம் இதழாசிரியர் சிவஸ்ரீ. தி.மயூரகிரி சிவாச்சார்யார் சிறப்புரை ஆற்றினார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More