Home இலங்கைநாட்டின் பொருளாதாரம் அறிவில்லாதவர்களால் நிர்வகிக்கப்பட்டது என்கிறார் நந்தலால்!

நாட்டின் பொருளாதாரம் அறிவில்லாதவர்களால் நிர்வகிக்கப்பட்டது என்கிறார் நந்தலால்!

by admin

நாட்டின் பொருளாதாரத்தை அறிவுள்ளவர்கள் நிர்வகித்திருந்தால் நாடு இவ்வாறான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்காது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எடுக்கப்படும் கடினமான தீர்மானங்களை மக்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு தெரிவித்ததன் மூலம் அறிவில்லாதவர்களால் நாட்டின் பொருளாதரம் நிர்வகிக்கப்பட்டது என்பதனை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More