Home இலங்கைVIP சேவைகளுக்கான கட்டணத்தை பசில் செலுத்தவில்லை?

VIP சேவைகளுக்கான கட்டணத்தை பசில் செலுத்தவில்லை?

by admin

இலங்கைக்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை (20.11.22) காலை மீண்டும் திரும்பிய முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ விமான நிலையத்தில் VIP சேவைகளைப் பயன்படுத்தியதற்கான கட்டணத்தையும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுக்கான கட்டணத்தையும் இன்னும் செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பசில் அமைச்சராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ இல்லாத நிலையில், விமான நிலையத்தில் பிரமுகர் ஓய்வறையைப் பயன்படுத்துவதற்கு அவருக்கு உரிமை இல்லை.

பசில் ராஜபக்சவின் பிரமாண்ட வருகைக்காக விமான நிலையத்தில் விருந்துபசாரமும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கான கட்டணமும் செலுத்தப்படவில்லை.

மேலும், பசில் விமான நிலையத்தில் Gold Route சேவையை பெற்றிருந்தார். இதற்காக ஒரு நபருக்கு 200 அமெரிக்க டொலர் அறவிடப்படும். எனினும் இதையும் அவர் செலுத்தவில்லை.

இன்றுவரை பணம் செலுத்தாமல் ராஜபக்சவும் அவரது பரிவாரங்களும் VIP ஓய்வறையை பயன்படுத்தியதை விமான நிலையத்தின் உள் வட்டாரங்கள் உறுதிப்படுத்தின

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More