சீனாவில் மத்திய மாகாணமான ஹெனான் மாகாணத்தின் அன்யாங் நகரில் உள்ள தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளர். மேலும் காணாமல் போயுள்ள இருவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு மீட்புப் பிரிவினாின நீண்ட போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை தவிர, மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துடன் சம்பந்தப்பட்ட கருதப்படும் சந்தேகநபா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலவீனமான பாதுகாப்புத் தரங்கள் மற்றும் அவற்றைச் செயல்படுத்தும் அதிகாரிகளின் ஊழல் காரணமாக சீனாவில் தொழில்துறை விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுகின்மை குறிப்பிடத்தக்கது