திருவெம்பாவை உபயகாரர்களும் ஆலயத்தினுடைய பக்தர்களும் திருவம்பாவை உற்சவம் நடைபெறாமல் பாலஸ்தாபனம் செய்வது தமது ஊருக்கு உகந்ததல்ல என்ற ரீதியிலே அந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்நிலையில், பாலஸ்தாபன நிகழ்வை எதிர்வரும் நாலாம் திகதி செய்யக்கூடாது என தடை உத்தர ஒன்றிணை கோரி திருவெம்பாவை உபயத்தை மேற்கொள்கின்ற ஐந்து திருவிழா உபயகாரர்கள் மற்றும் ஆலயத்தினை வழிபடுவர்கள் சார்பில் ஊர்காவற்துறை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்ற வழக்கு விசாரணைகளை அடுத்து, எதிர்வரும் நான்காம் திகதி செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த பாலஸ்தாபன நிகழ்வை தடை செய்வதாக ஊர்காவற்துறை மாவட்ட நீதிமன்றத்தினால் இன்றைய தினம் திங்கட்கிழமை கட்டளை வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலே எதிர்வரும் நான்காம் திகதி செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த பாலஸ்தாபன நிகழ்வானது நீதிமன்ற கட்டளை மூலம் தடை செய்யப்பட்டுள்ளது
நீதிமன்றத்திலே வழங்கப்பட்ட கட்டளை தொடர்பில் எதிராளிகளுக்கு கட்டளை அனுப்பப்படவுள்ளது. அத்தோடு இந்த வழக்கு எதிர்வரும் 12ஆம் தேதி வரை திகதியிடப்பட்டுள்ளது,