காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
நேற்று மாலை இடம்பெற்ற இச் சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலைமைகள் தொடர்பில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படவேண்டும் எனத் தெரிவித்ததுடன் தமது குடும்ப நிலைமைகள் மற்றும் வாழ்வாதார உதவிகளின் தேவைகள் தொடர்பாகவும் எடுத்துரைத்துள்ளனர்.
அத்துடன் தமது குழந்தைகளின் கல்வியின் எதிர்காலம் தொடர்பாக தெரிவித்த அவர்கள் அதற்கான உதவிகள் தொடர்பாகவும் கோரிக்கை விடுத்துள்ளதுடன் தமது நிலை குறித்து விளக்குதவதற்கு உரிய அதிகாரிகளை சந்திப்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனா