Home இலங்கைநல்லூர் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்

நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்

by admin

யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 15 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.  நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றைய தினம் புதன்கிழமை தவிசாளர் ப.மயூரனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் 3 உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 4 உறுப்பினர்கள், சுயேச்சை குழுவின் 2 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆகியவற்றின் தலா ஒரு உறுப்பினர் என 15 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். அதே வேளை, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 2 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More