Home இலங்கைகிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் மக்களை டெனீஸ்வரன் சந்தித்துள்ளார்

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் மக்களை டெனீஸ்வரன் சந்தித்துள்ளார்

by admin

கிளிநொச்சியில் இன்று திங்கள் முதல் தொடர் கவனயீர்ப்பு  போராட்டத்தை ஆரம்பித்துள்ள  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன் மற்றும்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி உறவினர்களால்
இன்று  காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இரவு பகலாக இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில்  இன்று  இரவு ஏழு மணியளவில்  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை வடக்கு மாகாண போக்குவரத்து மீன் பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் ஆகியோர் சென்று சந்திதது கலந்துரையாடியுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More