Home இலங்கை சட்ட விரோதமான இந்தியா செல்ல முயன்ற 5 பேர் கைது

சட்ட விரோதமான இந்தியா செல்ல முயன்ற 5 பேர் கைது

by admin

தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்ட விரோதமான முறையில் இந்தியா செல்ல முயன்ற 5 பேரை கைது செய்த கடற்படையினர்    தலைமன்னார்  காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்களில் 3 ஆண்களும் 2 பெண்களும் அடங்குகின்றனர்.

இவர்கள் பேசாலை,வவுனியா மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.-குறித்த 5 பேரும் விசாரணைகளின் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை(18) மாலை தலைமன்னார் காவல்துறையினரினால் மன்னார் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனா்.

இதன் போது 18 வயதிற்கு மேற்பட்ட 4 பேரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதோடு,16 வயது சிறுமியை சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஊடாக சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலைமன்னார் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More