198
பெருந்தொகையான போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வரும்போது அதனை பிடிப்பதை விட்டு விட்டு சிறியளவிலான போதைப்பொருட்களை பிடித்து படம் காட்ட வேண்டாமென ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திர பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
போதைப்பொருள் வர்த்தகத்தில் பெரும் புள்ளிகளும் பிரபலங்களும் ஈடுபடுகின்றனர். போதைப்பொருள் வியாபாரிகள் தொடர்பான விபரங்களும் காவல்துறையினரிடம் இருக்கும் போது, போதைப்பொருள் தொடர்பாக பாடசாலை செல்லும் மாணவர்களை இலக்கு வைத்து சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
வானத்தில் இருந்து விழும் ரொபி போல நினைத்து இந்த சோதனை நடவடிக்கையை செய்கிறார்களோ தெரியவில்லை. பாடசாலை மாணவர்களின் புத்தகப்பையை சோதிப்பது மாத்திரம் காவல்துறையினரினதோ இராணுவத்தினரோ வேலை அல்ல என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
பெருந்தொகையான போதைப்பொருட்களை நாட்டுக்குள் கடல் வழியாகவோ ஆகாய வழியாகவோ வரும்போது அவற்றை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Spread the love