Home இலங்கைஇந்திய மீனவர்கள் கைது

இந்திய மீனவர்கள் கைது

by admin
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பதினொரு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பருத்தித்துறை அருகே இன்றைய தினம் புதன்கிழமை இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் சுற்றுக் காவல் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த பதினொரு மீனவர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி அழைத்து வந்து, மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More