257
இலங்கையின் வடபகுதியின் உச்சி என அழைக்கப்படும் ”பனை முனை கல்வெட்டு திறப்பு விழா” இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. பருத்தித்துறை – பனைமுனை பகுதியில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக இலங்கையின் வடபகுதியின் உச்சி என பருத்தித்துறை – சக்கோட்டை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் இலங்கையின் தேசிய கொடி பொறிக்கப்பட்ட கட்டுமானம் கருதப்பட்டது. அதனை இராணுவத்தினர் வடிமைத்து இருந்தனர்.
அந்நிலையில் அது உண்மையில் தெற்கே தெய்வேந்திரமுனையை நேரே இணைக்கும் முனை அல்ல எனவும், வரலாற்று ரீதியாகவும் பண்டைய வரைபடங்களில் குறிக்கப்பட்டுள்ளவாறும் , உண்மையான இலங்கையின் தலைப்பகுதி (முனை) பருத்தித்துறை ஒரு பனை முனை தான் என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love