Home இலங்கைவயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நூல் கட்டிய பெற்றோர் – நீரிழப்பு ஏற்பட்டு குழந்தை உயிரிழப்பு!

வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நூல் கட்டிய பெற்றோர் – நீரிழப்பு ஏற்பட்டு குழந்தை உயிரிழப்பு!

by admin
வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வயிற்றோட்டத்தை நிறுத்த ஆலயத்தில் நூல் கட்டி காத்திருந்தமையால் குழந்தை உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியை சேர்ந்த கார்த்தீபன் பூஜா எனும் எட்டு மாத குழந்தையே உயிரிழந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை குழந்தைக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து பெற்றோர் குழந்தையை அருகில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு அழைத்து சென்று பூஜை செய்து , நூல் கட்டியுள்ளனர்.
இருந்த போதிலும் குழந்தைக்கு வயிற்றோட்டம் நிற்காத காரணத்தால் , மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை குழந்தையை சிகிச்சைக்காக யாழ், போதனா வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.  அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. அதனை அடுத்து நேற்றைய தினம் சனிக்கிழமை குழந்தையின் மரண விசாரணையின் போது ,வயிற்றோட்டம் ஏற்பட்டதன் காரணமாக அதிகளவான நீரிழப்பு ஏற்பட்டே குழந்தை உயிரிழந்துள்ளதாக
அறிக்கையிடப்பட்டுள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More