இலங்கையின் ஏற்றுமதி சந்தையை விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் புதிய சந்தைகளை கண்டுபிடித்து ஏற்றுமதி சந்தையை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மரபு ரீதியான ஏற்றுமதி சந்தை போதியளவு வாய்ப்புக்களை வழங்காத நிலையில், இவ்வாறு புதிய ஏற்றுமதி வழிகள் பற்றி ஆராயப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் சீனா, ஜப்பான், கொரியா, போன்ற நாடுகளுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுடன் சுத்நதிர வர்த்தக உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் இந்தியாவுடன் சீடா உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் எனவும் பாகிஸ்தானுடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.