Home இலங்கைபொற்பதியில் புலிகளின் ஆயுதம் – அகழ்வு கைவிடப்பட்டது

பொற்பதியில் புலிகளின் ஆயுதம் – அகழ்வு கைவிடப்பட்டது

by admin

 

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோதும் எதுவித ஆயுதங்களும் கிடைக்காத நிலையில் அகழ்வுப் பணிகள் கைவிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கொக்குவில் – பொற்பதி வீதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
 யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற பதிவாளர் தலைமையில், கோப்பாய் காவல்நிலைய பொறுப்பதிகாரி, உதவிக் காவல்துறை அத்தியட்சகர், ஆகியோரின் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன. இதன்போது காவல்துறையினர், விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நான்கு இடங்களில் அகழ்வு மேற்கொள்ளப்பட்டபோதும் எதுவித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை. அதனை அடுத்து மாலை அகழ்வு பணிகள் கைவிடப்பட்டன. அகழ்வுப் பணிகள் இடம்பெறும் இடத்திற்கு அருகிலேயே விடுதலைப்புலிகளினுடைய பிரதித் தலைவராக இருந்த மாத்தையாவினுடைய முகாம், மற்றும் விடுதலைப் புலிகளினுடைய சட்ட, மருத்துவக் கல்லூரியும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More