220
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த முதியவரின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வீதியில் சுயநினைவற்று காணப்பட்ட முதியவர் ஒருவர் நோயாளர் காவு வண்டி ஊடாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உரியவர்கள் சடலத்தை அடையாளம் காட்டி , பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு வைத் தியசாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Spread the love