Home உலகம்ஸ்பெயினின் தேவாலய தாக்குதலில் ஒருவர் பலி போதகருக்கு கடும்காயம்!

ஸ்பெயினின் தேவாலய தாக்குதலில் ஒருவர் பலி போதகருக்கு கடும்காயம்!

by admin

ஸ்பெயினின் தேவாலயம் ஒன்றில் கத்திக் குத்து தாக்குதலில் ஒருவர் பலியாகி உள்ளார். போதகர் உள்ளிட்ட பலர் காயம் அடைந்துள்ளனர்.

ஸ்பெயினின் தெற்கு துறைமுக நகரமான அல்ஜெசிராசில் உள்ள ஒரு தேவாலயத்தில் பொதுமக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை இனம் தெரியாதவர் ஒரவர் தேவாலையத்தில் புகுந்து பிரார்த்தனையில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களை கத்தியால் குத்தி சரமாரியாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் அந்த நபர் அருகில் உள்ள தேவாலயத்துக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை கத்தியால் குத்தியுள்ளார். இந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். பாதிரியார்கள் உள்பட பலர் காயம் அடைந்தனர்.

 தகவல் அறிந்ததும் காவற்துறையினர்  சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை கைது செய்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில். தாக்குதலாளியை கைது செய்து அழைத்துச் செல்லும் காணொளியை காவற்துறையினர் வெளியிட்டுள்ளனர். ஆனால் அவரது பெயர் மற்றும் எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற விவரங்களை  வெளியிடப்படவில்லை.

அதேவேளையில் தாக்குதல் நடத்திய நபர் 25 வயதான மொராக்கோ நாட்டை சேர்ந்தவர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலில் பலியானவர் டியாகோ வலென்சியா என்பதும் அவர் டிலா பால்மா தேவாலயத்தில் பணியாற்றியவர் என்பதும் தெரியவந்துள்ளது. படுகாயம் அடைந்த போதகர் அன்டோனியா ரோட்ரிக்ஸ் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும் போது, ‘பயங்கரமான தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் குறிப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்த பயங்கரவாத தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும், இதை பயங்கரவாத சம்பவமாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More