தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரால் சரத் வீரசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவிற்கு சென்று புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான மீட்பு பணிகள் குறித்த அறிக்கையொன்றையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை பேரவையின் அமர்வுகளில் பங்கேற்பதற்கான பணிகளில் தாம் ஈடுபட்டு வருவதாகவும் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் படைவீரர்களின் சார்பில் எவரும் முன்னிலையாவதில்லை என்ற காரணத்தினால் தான் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐக்கிய நாடுகள் அமைப்பில் போலி குற்றச்சாட்டு சுமத்தியுள்ளதாகவும் மங்களவைப் போன்று நாட்டை காட்டிக் கொடுக்கும் வெளிவிவகார அமைச்சர் ஒருவர் உலகில் வேறு எங்கும் கிடையாது எனவும் சரத் வீரசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.