ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் விசாரணை ஆணைக்குழு அமைக்க வேண்டும் என அவரது அண்ணன் மகன் தீபக் திடீரென இன்று வலியுறுத்தியுள்ளார்.
தான் சசிகலாவை ஜெயலலிதாவிற்கு சமமாக மதிக்கிறேன் எனவும் ஆனால் அவர் குடும்பத்திலிருந்து வேறு யாரும் கட்சிக்கோஇ ஆட்சிக்கோ வருவதை தானோ கட்சி தொண்டர்களோ ஏற்க மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் எடப்பாடி பழனிச்சாமியோ அல்லது ஓ. பன்னீர்செல்வமோ யார் முதல்வர் பதவுக்கு வந்தாலும் பிரச்சினையில்லை எனத் தெரிவித்த தீபக் தன்னால் தினகரன் மற்றும் வெங்கடேஷ் தலைமையை ஏற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தானும், தீபாவும் தான் போயஸ் கார்டன் பங்களாவுக்கு உரிமையாளர்கள் எனவும் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் அபராதத் தொகையான 100 கோடி ரூபாயை தானே கடன் வாங்கி கட்ட போவதாகவும் அதன்பின்னர் போயஸ் கார்டன் பங்களாவை உரிமை கோரவுள்ளதாவும் தெரிவித்துள்ளார்.