Home உலகம்வீட்டு வேலை செய்ததற்காக மனைவிக்கு 218,300 டொலர்கள் இழப்பீடு

வீட்டு வேலை செய்ததற்காக மனைவிக்கு 218,300 டொலர்கள் இழப்பீடு

by admin

ஸ்பெயினில்   விவாகரத்து செய்த மனைவிக்கு வீட்டு வேலை செய்ததற்காக 218,300 டொலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என  அந்நாட்டு நீதிமன்றம்  கணவனுக்கு   உத்தரவு பிறப்பித்துள்ளது.

25 ஆண்டுகளாக  அவா்கள் ஒன்றாக இருந்த போது வீட்டு வேலை செய்தமைக்காக குறைந்தபட்ச ஊதியத்தினை நிர்ணயித்த நீதிமன்றம்  , 218,300 டொலர்களை  வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அவா்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், 25 வருடங்களின் பின்னர் கணவர் மனைவியிடம் இருந்து விவாகரத்து  கோரியிருந்தாா். வீட்டு வேலைகள் செய்வதற்காகவே  கணவன் தன்னை திருமணம் செய்து கொண்டார் எனவும் இதனால் தனக்கு விவாகரத்துடன் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் மனைவி நீதிமன்றில்   விடுத்த  கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அவருக்கு கணவர்  218,300 டொலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

சுத்தம் செய்வது, கழிவறை கழுவுவது, சமையலறையை பேணுவது என வீட்டை பராமரிக்கும் வேலைகளை ஆணும் பெண்ணும் சரிசமமாக பங்கிட்டு செய்ய வேண்டும் என நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளதுடன், வீட்டில் வேலைகளை தனியாக செய்பவருக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெண்ணின் கணவர் தனது இரண்டு பிள்ளைகளுக்கும் மாதாந்த பராமரிப்புத் தொகையை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More