காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 போ் உயிரிழந்துள்ளனா். . சிறிய ரக பட்டாசுகள் மற்றும் வாண வேடிக்கைகள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வரும் குறித்த தொழிற்சாலையில் இன்று(22) நண்பகல் 12 மணியளவில் குடோனுக்கு வெளியே காய வைக்கப்பட்டு இருந்த, பட்டாசின் மூலப்பொருட்கள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளன. இந்த தீ வேகமாக பரவி பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையின் குடோன் பகுதிக்கும் பரவியுள்ளது. அந்த சமயம் குடோன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 30க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து கொண்டிருந்தனா்.
தீ மளமளவென பரவியதையடுத்து அருகிலுள்ள மக்கள் தீயை அணைக்க முயற்சி செய்ததுடன் காஞ்சிபுரம் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து தீயணைப்பு வாகனங்களில் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் சம்பவத்தில் ஒன்பது பேர் உயிாிழந்துள்ளதுடன் மேலும், 13 பேர் படுகாயமடைந்துள்ளனா்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினா் குடோன் உரிமையாளர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ளனர்.