Home உலகம்உகாண்டாவில்  ஓரின சேர்க்கையாளா்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

உகாண்டாவில்  ஓரின சேர்க்கையாளா்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

by admin

கிழக்கு ஆபிரிக்க நாடான உகாண்டாவில்  ஓரின சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான சட்டமூலம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் படி,ஓரின சேர்க்கையாளா்கள் என அடையாளம் காணப்படுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுவதுடன் டும் விதி மீறல்களில் ஈடுபடும்  ஓரின சேர்க்கையாளா்க ளுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது

ஏற்னவே உகண்டா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட ஆபிரிக்க நாடுகளில் ஓரின  உறவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்  தற்போது உகாண்டாவில்  இவ்வாறு  ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான புதிய நடவடிக்கையாக சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றததில் 389 உறுப்பினர்களின்  ஆதரவுடன் நிறைவேறியுள்ள இந்த மசோதா  . ஜனாதிபதி யோவேரி முசெவேனிக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதேவேளை  ஓரின சேர்க்கை எதிர்ப்பு மசோதாவை மனித உரிமை ஆர்வலர்கள்   இது  ஒரு வெறுக்கத்தக்க சட்டம் என தெரிவித்துள்ளனர்.

 

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More