இந்தியாவிலேயே முதன்முறையாக பாலியல் குற்றவாளிகள் அடங்கிய பதிவேட்டை அறிமுகம் செய்யப் போவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஆளுநர் பி.சதாசிவம் கேரள சட்டப்பேரவை கூட்டத் தொடரின் உரையாற்றுகையில்
பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது எனவும் இதன் ஒரு பகுதியாக, இந்தியாவிலேயே முதன்முறையாக பாலியல் குற்றவாளிகள் அடங்கிய பதிவேடு அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பதிவேட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை தரும் குற்றவாளிகள் பெயர் மற்றும் அவர்களின் அனைத்து அடையாள விவரமும் இடம் பெற்றிருக்கும் எனவும் இந்த பதிவேடு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் பாலியல் குற்ற வாளிகள் தண்டனையிலிருந்து தப்பி விடுவது அதிகரித்து வருகிறது எனவும் இதைத் தடுக்கும் வகையில், தாலுக்கா அளவில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்