நாட்டில் சமாதானம் நல்லிணக்கத்தை வலியுறுத்தி, அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டி, வெலிமட சதானந்த தேரர், யாழ்ப்பாணம் – ஆரியகுளம் ஸ்ரீ நாகவிகாரையிலிருந்து தெய்வேந்திரமுனை வரை பௌத்த சின்னத்தை தாங்கியவாறு, நடை பயணம் ஒன்றை இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பித்தார்.
நாட்டில் சமாதானம் ஒற்றுமையினை வலியுறுத்தி நடை பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும், தனது தூரநோக்கமான செயற்பாட்டிற்கு அனைத்து மக்களும் ஆதரவினை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
நாட்டில் வாழுகின்ற அனைத்து இன மக்களும் குல, மத பேதம் இன்றி ஒற்றுமையாகவும் நிரந்தர சமாதானத்துடன் வாழ வேண்டி பிரார்த்தித்து நயினாதீவு நாக விஹாரையில் வழிபாடுகளை மேற்கொண்டு, ஆரியகுளம் நாக விகாரையில் இருந்து இலங்கையில் உள்ள அனைத்து பிரதேசங்களுக்கும் சென்று தெய்வேந்திர முனையில் தனது நடை பயணத்தை நிறைவு செய்யவுள்ளதாகவும் வெலிமட சதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.