Home இலங்கையாழில். உணவகங்களுக்கு ஒரு இலட்சத்து 10ஆயிரம் – பலசரக்கு கடைக்கு 60ஆயிரம் தண்டம்

யாழில். உணவகங்களுக்கு ஒரு இலட்சத்து 10ஆயிரம் – பலசரக்கு கடைக்கு 60ஆயிரம் தண்டம்

by admin

யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரு  உணவகங்களுக்கு ஒரு இலட்சத்து 10 ஆயிரம்  தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் , உணவகத்தினை சீரமைக்கும் வரையில் உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.  அதேவேளை காலாவதியான பொருளை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் பொதுசுகாதார பரிசோதகரின் திடீர் பரிசோதனை நடவடிக்கையின் போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரு உணவகங்கள் இனம் காணப்பட்டதை அடுத்து அதன் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணைகளை அடுத்து ஒரு உணவகத்திற்கு 80 ஆயிரம் ரூபாயும் , மற்றைய உணவகத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் நீதிமன்றம் தண்டம் விதித்தது. அத்துடன் உணவகத்தின் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வரையில் உணவகத்திற்கு சீல் வைக்குமாறும் மன்று கட்டளையிட்டது.
அதேவேளை காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த பலசரக்கு கடை உரிமையாளருக்கு எதிரான வழக்கு விசாரணையை அடுத்து , அவருக்கு 60 ஆயிரம் ரூபாய் நீதிமன்று தண்டம் விதித்தது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More