313
இலங்கையின் பல பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. பேருவளை நகரில் இருந்து 37 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கு அடியில் இன்று(30) நண்பகல் 1.02 மணியளவில் ஏற்பட்ட நில அதிர்வு இலங்கையின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக களுத்துறை மாவட்டத்தில் களுத்துறை, பயாகல, மக்கொன, பேருவளை, அளுத்கம, பண்டாரகம ஆகிய பகுதிகளில் உணரப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். மேலும் நில அதிர்வு ஏற்பட்ட போதிலும் அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
Spread the love