Home இந்தியாஅரிசி திருடிய பழங்குடி இளைஞா் அடித்து படுகொலை – 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

அரிசி திருடிய பழங்குடி இளைஞா் அடித்து படுகொலை – 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

by admin

கேரளா மாநிலம் அட்டப்பாடியில் அரிசி திருடியதாக பழங்குடி இளைஞரான  மது  என்பவா் அடித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மன்னார்காடு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 கடந்த  2018-ம் ஆண்டு பல சரக்கு கடையில் அரிசி திருடினார் என்பதற்காக மதுவை அப்பகுதியினர் அடித்து சித்ரவதை செய்த நிலையில் காவல்துறையினா் தலையிட்டு அவரை  மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போதிலும் அவா்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

அப்பாவி பழங்குடி இளைஞரான  . மதுவின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவா் பட்டினியால்  வாடிக் கொண்டிருந்ததாகவும்   அவரது  வயிற்றில் ஒரு பருக்கை உணவுப் பொருள்  கூட   இல்லாமல் இருந்தது எனவும் அறிக்கையிட்டிருந்தனா்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யபட்டு மன்னார்காடு எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்ததுடன் 2018-ம் ஆண்டு இந்த வழக்கில் 3,000 பக்க குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கில் மொத்தம் 16 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.  எனினும்   மது கொலை வழக்கு ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டு செல்வதாக  என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வந்த நிலையில்    நேற்று  மதுவை படுகொலை செய்த 16 பேரில் 14 பேர் குற்றவாளிகள் என மன்னார்காடு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

  இத்தீர்ப்பைத் தொடர்ந்து இன்று குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன. குற்றவாளிகளான 14 பேரில் 13 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து  நீதிபதி. தீர்ப்பளித்துள்ளார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More