Home உலகம்ஜப்பானில் 10 பேருடன்   பயணித்த ராணுவ ஹெலிகொப்டரைக் காணவில்லை

ஜப்பானில் 10 பேருடன்   பயணித்த ராணுவ ஹெலிகொப்டரைக் காணவில்லை

by admin
 

ஜப்பானின் தெற்கு பகுதியில் 10 பேருடன்   பயணித்த ராணுவ ஹெலிகொப்டர் ஒன்று இன்று மாலை  காணாமல் போயுள்ளது.  யுஎச் பிளாக் ஹக் என்ற குறித்த  ஹெலிகொப்டர்  மியாகோ தீவு அருகே சென்றபோது ரேடாரில் இருந்து மறைந்துள்ளதனால்  அது விபத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஹெலிகொப்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டமை தொடர்பாக கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து கடலோர காவல் படையின் மீட்புக்குழுவினரும் நான்கு ரோந்து கப்பல்களும்  தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More