183
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் பாவனைக்கென அமைக்கப்பட்ட நூலகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜாவால் இன்றைய தினம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நூலகர் ஸ்ரீகாந்தலக்சுமி அருளானந்தம் சிவநேசன் குடும்பத்தினரால் சம்பிரதாய பூர்வமாக நூல்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகரிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் கே.பி.ஏ.உதயகுமார, பிரதான ஜெயிலர் எச்.எம்.டி.ஹேரத்,யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சா.சுதர்சன் உள்ளிட்ட சிறை அதிகாரிகள், சிறைக்கைதிகளும் கலந்துகொண்டனர்.
யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நூலகர் ஸ்ரீகாந்தலக்சுமி அருளானந்தம் சிவநேசன் குடும்பம் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தினர் இந்தச் சிறைச்சாலை நூலகத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்நூலகம் தொடர்ச்சியாக இயங்குவதற்கான முழுமையான பங்களிப்பையும், பராமரிப்பு, ஆலோசனைகளையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் வழங்கவுள்ளது.
Spread the love