Home இலங்கைசஹ்ரானின் மைத்துனர் கைது

சஹ்ரானின் மைத்துனர் கைது

by admin

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹாசிமின்  மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவா் 3 வருடங்களின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் அவர்  நீர்கொழும்பிலுள்ள  உள்ள அவரது மனைவின் பெற்றோரின் வீட்டுக்கு  சென்று கொண்டிருந்த  போது கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட  நபர், சஹ்ரான் ஹாசிமின் மனைவியான பாத்திமா என்பவருடைய சகோதரர்  என காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

தமக்கு  கிடைத்த புலனாய்வு தகவல்களின் பிரகாரம், சந்தேகத்தின் பேரில் இவ்விருவரும் கைது செய்யப்பட்டதாக கொவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More