Home இலங்கையாழ்.பண்ணை சுற்று வட்ட பகுதியில் உள்ள நாகபூசணி அம்மனை அகற்ற காவல்துறையினர் நடவடிக்கை ?

யாழ்.பண்ணை சுற்று வட்ட பகுதியில் உள்ள நாகபூசணி அம்மனை அகற்ற காவல்துறையினர் நடவடிக்கை ?

by admin
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசனி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்றுவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறைத்  தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. .
நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தை பிரதிபலிக்கும் வகையில், யாழில் இருந்து நயினாதீவு செல்லும் வீதியில் யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசனி அம்மன் திருவுருவச் சிலைக்கு தமிழ் புதுவருடப் பிறப்பில் பால் அபிசேகம் உருத்திர சேனா அமைப்பினால் செய்யப்பட்டது.
இந்த நிலையில் உருத்திர சேனா அமைப்பின் பிரதிநிதிகளை நேற்றைய தினம் சனிக்கிழமை  யாழ்ப்பாணம் காவல்  நிலையத்துக்கு அழைக்கப்பட்டு 3 மணிநேரம் தீவிர விசாரணக்கு உள்படுத்தப்பட்டனர்.
உருவச் சிலையை அமைத்தவர்கள் தொடர்பில் தமக்கு தகவல் தெரியாது என்றும் தாம் பால் அபிசேகம் செய்ததாகவும் உருத்திர சேனா அமைப்பினர்  காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் எந்தவொரு அனுமதியுமின்றி அமைக்கப்பட்ட நாகபூசனி அம்மனின் சிலையை அகற்ற தீவிர நடவடிக்கையில் யாழ்ப்பாணம் காவல்துறையினர்  ஈடுபட்டுள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More